×

15 வயது சிறுமியை வீட்டில் வேலைக்கு வைத்து மீண்டும் சர்சையில் சிக்கினார் நடிகர் ஷாம்!!!

சென்னை:  சென்னையில் சூதாட்ட புகாரில் கைதான நடிகர் ஷாம் வீட்டில், 15 வயது சிறுமியை வேலைக்கு வைத்திருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிற்கு புகார் ஒன்று வந்துள்ளது. அதாவது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகர் ஷாம் வீட்டில் 15 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தியதாகவும், அவரை கொடுமை படுத்தியதாகவும் புகார் வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, தற்போது குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் திடீரென நடிகர் ஷாம் வீட்டில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

அதாவது 15 வயது சிறுமியின் விவரங்களை பாதுகாப்பு குழுவினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  அதில் குறிப்பாக சிறுமியின் வயது தொடர்பாக ஆதாரங்களை கோரியுள்ளனர். பின்னர், ஷாமிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமி தொடர்பாக எவ்வித ஆதாரமும் இல்லாததால், சிறுமியை உடனடியாக பாதுகாப்பு குழுவினர் மீட்டு சென்றுள்ளனர். பின்னர், நடிகர் ஷாம் சிறுமியின் ஆதாரங்களை கொண்டு குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்துள்ளார். அப்போது சிறுமிக்கு 15 வயது என்றும், தனது வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணின் மகள் என்றும் கூறியுள்ளார்.

மேலும், சிறுமி அவரது தாயுடன் வீட்டிற்கு வந்து விளையாடி கொண்டிருப்பார். வேறு எவ்வித வேலைக்கும் சிறுமியை வற்புறுத்தியதில்லை என அவர் கூறியுள்ளார். மேலும், சிறுமியின் படிப்பு செலவிற்கும் நான் உதவி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமியை மீண்டும் ஷாம் வீட்டிற்கே அனுப்பிவைத்துள்ளனர். ஏற்கனவே சூதாட்டத்தில் ஷாம் கைதானதால், தற்போது ஏற்பட்டுள்ள சிறுமி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags : Actor ,home ,Shaam , Actor Shaam , controversy , 15 year old girl,
× RELATED நடிகர் பரத் பங்கேற்பு